Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentD50யில் இணைந்த அஜித்குமாரின் மகள்.. அனிகா சுரேந்திரனை தூக்கிய தனுஷ்.. முக்கிய கதாபாத்திரம் போல!

D50யில் இணைந்த அஜித்குமாரின் மகள்.. அனிகா சுரேந்திரனை தூக்கிய தனுஷ்.. முக்கிய கதாபாத்திரம் போல!

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இவர் ஏற்கனவே கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் தனுஷின் 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகியது. ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் சந்திப் கிசனுக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாராம்.

- Advertisement -

தனுசுக்கு தங்கை வேடத்தில் துசாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக, சென்னை ஈசிஆர் சாலையில் 600 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரனை ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ்.

18 வயது பூர்த்தியடைந்ததில் இருந்து கிளாமரில் பாரபட்சம் காட்டாமல் மிரட்டி வரும் அனிகா சுரேந்திரன், ஏற்கனவே 3 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனுஷ் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular