பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தேசிய விருது பெற்ற மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்தார். மாவீரன் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் தன் மக்களுக்காக துணிந்து செயல்படும் ஒரு வீரனாக மாறுவதே கதைக்களம். படத்தின் முதல் பாதி யோகி பாபுவின் ஒன்லின் காமெடியால் தரமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி படு சீரியஸாக போவதாகவும் இருந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.
இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ரங்கூன் திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, எஸ்கே 24 படத்தை இயக்குவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக சிவகார்த்திகேயன் கடுமையான பயிற்சிகளை மும்பையில் மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்கள் காண உடல் மொழி அந்த சைகைகள் குறித்தும், ஆயுதங்களை கையாள்வது பற்றியும் சிவகார்த்திகேயன் கற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் கதையில் இந்த படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் உடன் சண்டையில் மூன்று தீவிரவாதிகளை கொன்று விட்டு அந்த சண்டையின் போது வீர மரணமும் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு கதையில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.