கடந்த 2019ம் ஆண்டில் வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கவின். இநத்ப் படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கவினுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை வந்த கவினுக்கு, ரசிகர்களாக ஏராளமானோர் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிகில் பட புகழ் அம்ரிதா ஐயருடன் இணைந்து நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல் கவனின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது. இதன் பின்னர் தான் அண்மையில் டாடா திரைப்படம் வெளியாகியது. இதில் அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார் கவின். இந்தப் படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாசின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், படம் வெளியாகி சில தினங்களிலேயே பல கோடி வசூலை அள்ளியது.
இதனைத் தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் கவின் நடிக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 10 நாட்கள் மும்பையில் முடிவடைந்துள்ளது. தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் கவின் ஜோடியாக நடிக்க லவ் டுடே புகழ் இவானா மற்றும் பேச்சிலர் புகழ் திவ்ய பாரதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் திவ்ய பாரதியே இறுதியில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சம்பவ விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை இழுப்பறியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.