தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட் இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். எல்லோரும் ஹீரோக்களுக்கு பின் ஓடிய போது, சாதாரணமாக 18 வயது இளைஞனான தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமான தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா.
அவருக்கு க்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட்டாக 7ஜி ரெயின்போ காலணி படம் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய புதுப்பேட்டை இன்றுவரை கல்ட் கிளாசிக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து வந்த மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், நானே வருவேன் என்று வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி ஜாம்பவான் இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார் செல்வராகவன்.
அண்மை காலமாக இயக்கத்தை கைவிட்ட செல்வராகவன் படங்களில் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, சாணி காயிதம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு டஜன் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பரத், செல்வராகவன் இயக்கவிருந்த படம் குறித்து அட்டகாசமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அந்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை படத்திற்கு முன்பாக செல்வராகவன் காசிமேடு என்ற படத்தை இயக்க திட்டமிட்டு வந்தார். அந்தப் படத்திற்காக நடிகர் அஜித்குமாரிடம் கதை கூறி ஓகே செய்துள்ளார். அதேபோல் அஜித் மட்டுமல்லாமல் தனுஷ் மற்றும் பரத் ஆகியோருக்கு கதை சொல்லப்பட்டுள்ளது.
அஜித்குமாருக்கு இணையான கதாபாத்திரத்தில் தனுஷ் மற்றும் பரத் நடிக்க விருந்தாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் காசிமேடு திரைப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை என்று பரத் தெரிவித்துள்ளார். செல்வராகவன் உச்சத்தில் இருந்த காலத்தில் அஜித்குமாருக்கு கதை கூறி ஓகே செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.