Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentசிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரை மணந்த பிரபல நடிகரின் மகள்… கலகலப்பாக நடந்த கல்யாணம்…

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரை மணந்த பிரபல நடிகரின் மகள்… கலகலப்பாக நடந்த கல்யாணம்…

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் மிக முக்கியமானவர் தலைவாசல் விஜய். 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்னும் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். விஜயகுமார் என்னும் பெயரை, தலைவாசல் திரைப்படத்துடன் இணைத்து தலைவாசல் விஜய் என்று அழைக்கப்பட்டார். அந்த ஆண்டே, தேவர்மகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு சகோதரராக நடித்து கவனிக்கப்பட்டார் தலைவாசல் விஜய்.

- Advertisement -

இதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் தலைவாசல் விஜய் தென்பட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். திரை உலகத்தை தாண்டி, குடும்பத்திலும் மிகப் பொறுப்பு மிக்கவராக தலைவாசல் விஜய் இருந்து வருகிறார். இவரது மூத்த மகளான ஜெயவீனா, நீச்சல் போட்டிகளில் ஆர்வம் மிக்கவராய் இருக்க அவருக்கு உந்துகோளாய் செயல்பட்டு வந்தார் தலைவாசல் விஜய்.

இதற்காக பல்வேறு முக்கியமான திரைப்பட வாய்ப்புகளை உதறித் தள்ளிய நடிகர், தனது மகள் எங்கெல்லாம் போட்டிக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் பயணித்து அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். தந்தை கொடுத்த உத்வேகத்தால், ஜெயவீனா சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளினார். இவரும், கிரிக்கெட் வீரர் அபராஜித்தும் காதலித்து வந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது.

- Advertisement -

ரஞ்சித் கோப்பையில் முதல் முறையாக அறிமுகமான அபராஜித், தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி கவனம் பெற்றார். முக்கியமாக, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், அபராஜித்தின் பங்கு அற்புதமாக இருந்தது. துலிப் கோப்பையிலும் பிரகாசித்த இந்த நட்சத்திர ஆட்டக்காரர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

- Advertisement -

இந்த நிலையில், அபராஜித் – ஜெயவீனாவின் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்ட, இன்று திருமணம் உற்சாகமாக நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு வீட்டு தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. திரை உலகத்தை சேர்ந்தவர்கள் பெரிதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலையில், தலைவாசல் விஜய் தரப்பினர் வருவதற்காகவே தனியாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, புதிதாக திருமணம் முடிந்த அபராஜித் – ஜெயவீனா தம்பதியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Most Popular