அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவு, விநாயகன், மிர்ணா, யோகி பாபு, மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா என்று நட்சத்திர பட்டாளமே ஜெயிலர் படத்தில் அசத்தியுள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் ரூ.500 கோடியை நெருங்கி வருகிறது.
இந்தப் படத்தை சன் டிவி அலுவலகத்தில் பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனை பாராட்டிவிட்டு நேரடியாக இமயமலை சென்றார். இதையடுத்து ரஜினியின் இமயமலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரால்கின. இதன்பின் ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம் குறித்து அறிந்த ரஜினிகாந்த், இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டார்.
அங்கிருந்து உத்தரப் பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அவரை சந்தித்த போது, நேரடியாக அவரது காலில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு ரஜினிகாந்த் மரியாதை அளித்தார். இதனால் சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்கள் அனைவரும் கிண்டல் செய்யப்பட்டனர்.
இதன்பின் உபி துணை முதல்வருடன் படத்தை பார்த்த ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த், யோகிகள், ரிஷிகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் காலில் விழுந்து மரியாதை கொடுப்பது என் வழக்கம். அதன் காரணமாக யோகி காலில் விழுந்தேன் என்று தெரிவித்தார்.
அப்போது ரஜினியின் அருகில் இருந்த ஒருவர், அண்ணா அடுத்தப் படம் விரைவில் ரிலீஸ் என்று மட்டும் சொல்லிடுங்க என்று மைக் முன் வந்து அறிவுறுத்தினார். அப்போது கோபமடைந்த ரஜினிகாந்த், கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று கைகளால் சைகை காட்டி நிறுத்தினார். இதனை பகிர்ந்து ப்ளூசட்டை மாறன் கிண்டல் செய்துள்ளார்.
ரஜினியின் வீடியோவையும், இதே நபர் விஜயகாந்திடம் வம்புழுந்த வீடியோவையும் பகிர்ந்து, கேப்டன் எப்போதும் கேப்டன் தான் என்று பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் ரஜினி ரசிகர்கள் ப்ளூசட்டை மாறன் இடையே பஞ்சாயத்து தொடங்கியுள்ளது.