Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentஅஜித்தை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் எனக் கேள்வி கேட்ட நபர்… எதிர்பாராத பதிலளித்து ஷாக்...

அஜித்தை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் எனக் கேள்வி கேட்ட நபர்… எதிர்பாராத பதிலளித்து ஷாக் கொடுத்த விஜய் மகன்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். யாருமே எதிர்பாக்காத நேரத்தில் இது தொடர்பான அறிவிப்பை லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அறிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், சஞ்சய் கூறிய கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அதில் நிறைய புதுமைகள் இருந்ததால் நாங்கள் தயாரிக்க ஒப்புக் கொண்டோம் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

படத்தில் முன்னணி நடிகர் நடிகைகளை இடம்பெற வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவில் திரைப்படம் தொடர்பான பயிற்சி படிப்பை முடித்த சஞ்சய், லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான படிப்பையும் மேற்கொண்டுள்ளார். தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் நிலையில், அவரை நடிகராக்க விரும்பவே விஜய் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் விஜய் தனது மகனுக்கு கதை கேட்டதாகவும், அது மிகவும் பிடித்துப் போனதால் சஞ்சய்யை நடிக்குமாறு விஜய் கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சஞ்சய், தனக்கு இயக்குனராகதான் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக இரண்டு ஆண்டுகள் அவர் கால அவகாசமும் கேட்டுள்ளார்.

- Advertisement -
Sanjay

இந்த நிலையில் தந்தையிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றிய ஜேசன் சஞ்சய், தனக்கு கிடைத்த வாய்ப்புக்கு மனமார நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, சஞ்சய் பதிலளித்துள்ளார். அதில், உங்களுக்கு யாரையெல்லாம் இயக்க ஆசை என்று ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த சஞ்சய், அப்பா, தல அஜித், விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

- Advertisement -

விஜயைத் தவிர உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று இன்னொருவர் கேள்வி கேட்க, அதற்கும் அஜித் மற்றும் விஜய் சேதுபதி என்றே பதில் அளித்து இருக்கிறார் சஞ்சய். மேலும் அஜித் செய்த பிரியாணியை தான் ஒரு முறை ருசித்திருப்பதாகவும் சஞ்சய் கூறியிருக்கிறார். அஜித்தை பற்றி ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் கூறுங்கள் என்று கேள்வி கேட்க, அதற்கு கெத்து என்று பதில் அளித்து இருக்கிறார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாக, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Most Popular