தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெயர் போன நடிகர் மன்சூர் அலிகான். அண்மை காலங்களில் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று வெளிப்படையாக பேசி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதனால் மன்சூர் அலிகானின் பேட்டிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ட்ரெண்டாகியது. இதன் காரணமாகவும் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாகின.
நேற்று முன்தினம் வெளியான லியோ படத்தில் கூட மன்சூர் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் சொந்தமாக சரக்கு என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் சரக்கு படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சரக்கு படத்தை சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் குழு முன்னிலை திரையிட்டுள்ளார். அப்போது படத்தை பார்த்த சென்சார் குழுவினர், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து சென்சார் குழுவை பொளந்து கட்டினார்.
மன்சூர் அலிகான் பேசும் போது, அம்பாதி, அதானி என்று பெயர் வருகிறது. அது தனி நபர்களை குறிக்கும். அதனால் கட் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏர்போர்ட், ரயில்வே, தண்ணீர், மின்சாரம் என்று எத்தனை துறைகளை அவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். அவர்களை நேரடியாக சொன்னால் கட் செய்ய சொல்கிறார்கள்.
வாச்சாத்தி பிரச்சனை நண்பர் வெற்றிமாறன் படமாக எடுத்து, அதனை கற்பனை என்று வெளியிட்டார். அதுபோல் வெளியிடுகிறோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் ஒத்து வரவில்லை. ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ரா.. ரா.. ராத்திரிக்கு என்று பாடம் பாடியதோடு, கவர்ச்சியாக தொடைக்கு கீழ் கைகளை காட்டி நடனம் ஆடினார்.
உடையும் அவ்வளவு கவர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதனை சென்சார் குழுவினர் அனுமதித்தார்கள். தமன்னாவால் தான் அந்த படமே ஓடியது. மற்றபடி ஜெயிலர் ஒரு வெங்காயமும் இல்லை. அதுபோல் ஒரு நடிகைக்கு பணம் கொடுத்து கவர்ச்சி நடனம் ஆட வைக்க முடியாதா.. பெரிய படம் என்றால் ஒரு சட்டம். எங்களுக்கு ஒரு சட்டமா என்று காட்டமாக விமர்சித்துள்ளார். மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.