Tuesday, December 17, 2024
- Advertisement -
HomeEntertainmentஉலகநாயகன் கதையை இயக்குகிறாரா அ.வினோத்? ”தலைவன் இருக்கின்றான்” கதையை தூசி தட்டிய கமல்ஹாசன்.. நவ.7ல் வெளியாகும்...

உலகநாயகன் கதையை இயக்குகிறாரா அ.வினோத்? ”தலைவன் இருக்கின்றான்” கதையை தூசி தட்டிய கமல்ஹாசன்.. நவ.7ல் வெளியாகும் அறிவிப்பு!

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பிஸியாகியுள்ளார். ஒரு பக்கம் தயாரிப்பு, இன்னொரு பக்கம் நடிப்பு, பிக் பாஸ் ஷோ என்று அனைத்து ஏரியாவிலும் ஒருகை பார்க்கிறார். ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை நடிகர் கமல்ஹாசன் முடித்து கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமல்ஹாசன் – மணி ரத்னம் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கான அறிமுக டீசர் வீடியோவின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

இதன் டீசர் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவ.7ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணி ரத்னம் படத்திற்கு முன்பாக இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் 233வது படமாக உருவாகும் அந்த படத்திற்கு அறிவிப்பு வீடியோவும் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.

- Advertisement -

அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அ.வினோத் – கமல்ஹாசன் படத்திற்கு ”தலைவன் இருக்கின்றான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் ”தலைவன் இருக்கின்றான்” என்று ஒரு படத்தை தொடங்கினார்.

- Advertisement -

ஆனால் அந்த படம் ஆரம்பக் கட்ட பணிகளுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அ.வினோத் இயக்கும் படத்திற்கு ”தலைவன் இருக்கின்றான்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், கமல்ஹாசனின் கதைக்கு அ.வினோத் திரைக்கதை எழுதி இயக்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக நவ.7ல் தெரிய வரும். இதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் வடிவேலு நடிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular