Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் திருமணம் செய்யும் அமலா பால்.. நீண்ட கால நண்பருடன் ஏற்பட்ட காதல்.. எப்படி பழக்கம்...

மீண்டும் திருமணம் செய்யும் அமலா பால்.. நீண்ட கால நண்பருடன் ஏற்பட்ட காதல்.. எப்படி பழக்கம் ஏற்பட்டது? பிறந்தநாளன்று அறிவிக்க என்ன காரணம்?

இயக்குநர் சாமி இயக்கத்தில் ”சிந்து சமவெளி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். முதல் படத்திலேயே சர்ச்சையான காட்சிகளில் நடித்தாலும், மைனா படத்தில் நடித்து சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் நடிகை அமலா பாலுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று முன்னணி நாயகர்களுடன் நடிப்பு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அதன்பின் தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, விஐபி என்று விக்ரம், ஆர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்ட நாயகர்களுடன் ஜோடி போட்டார். அதேபோல் தெலுங்கில் ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். அதன்பின் திடீரென இயக்குநர் ஏஎல் விஜய் உடன் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் விஐபி படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் தனுஷ், அமலா பால் நடிப்பில் அம்மா கணக்கு படத்தை தயாரித்தார். அதேபோல் விஐபி – 2 படத்திலும் வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து நடித்ததால் அவருக்கும் ஏஎல் விஜய்-க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இதன்பின் நடிகை அமலா பால் மீண்டும் நடிக்க வந்தார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன்பின் சொந்தமாக கடாவர் படத்தை நடித்து, தயாரித்தார். அதேபோல் இந்தியில் போலா படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்தார். இதன்பின் இன்ஸ்டாகிராமில் ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தார். இதனிடையே அமலா பால் இன்னொரு திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வந்தது.

- Advertisement -

ஆனால் அந்த செய்திகளை நடிகை அமலா பால் முற்றிலும் மறுத்தார். இந்த நிலையில் நடிகை அமலா பால் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமலா பாலின் நீண்ட கால நண்பர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள ஆடிப்பாடி ப்ரொபோஸ் செய்கிறார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அமலா பால் உடனடியாக அவரின் ப்ரோபோசலை ஏற்றிக் கொண்டதோடு, அவருக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இதன் மூலம் நடிகை அமலா பால் அவருடன் நீண்ட கால காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போதும் திருமணம், அவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

Most Popular