Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentஇந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்திற்காக காய் நகர்த்தும் சங்கர்… கால்ஷீட்டை அள்ளி வீசிய கமல்ஹாசன்… பக்கா...

இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்திற்காக காய் நகர்த்தும் சங்கர்… கால்ஷீட்டை அள்ளி வீசிய கமல்ஹாசன்… பக்கா பிளான் ரெடி…

இந்திய சினிமாவில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஷங்கர். ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களுக்கு திரையரங்கில் காட்சி விருந்து கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வரும் அவர், அதனை படத்துக்கு படம் செய்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் அவர் எடுக்கும் மெனக்கிடலும், பொறுமைத்தன்மையும் இங்கு பலராலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதேசமயம் ஷங்கர் படத்தின் பாடல்களுக்கு மட்டும்தான் காசை செலவழிப்பார் என்றும், காட்சிகளில் கோட்டை விடும் அவர் அந்த அளவு பிரம்மாண்ட இயக்குனர் இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் வெற்றி திரைப்படம் என்பது சங்கர் வசம் எப்போதுமே உண்டு என்பதுதான் இங்கு மாற்ற முடியாத கருத்து. ஜென்டில்மேனில் தொடங்கி காதலன், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் என அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வசூலை பெற்றன.

ஆரம்பத்தில் தனது மூன்றாவது திரைப்படத்திலேயே கமல்ஹாசன் உடன் இணைந்த சங்கர் இந்தியன் திரைப்படத்தை கொடுத்தார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகி, சமூகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை தட்டி கேட்பதை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில், சேனாதிபதி தாத்தாவாக வந்து கமல்ஹாசன் அலறவிட்டார். அவரின் பக்குவப்பட்ட நடிப்பினால் இந்தியன் திரைப்படத்திற்காக தேசிய விருதை கமல்ஹாசன் பெற்றார்.

- Advertisement -

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொலை செய்யும் சேனாதிபதி தாத்தா, கடைசியாக தனது மகனும் அதில் ஈடுபட்டு இருக்கிறான் என்று தெரிந்ததும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவனைக் கொலை செய்யும் கிளைமாக்ஸை வைத்திருந்தார் சங்கர். ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் இந்த திரைப்படத்தின், இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

2017 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், காஜா அகர்வால், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஆண்டுக்கணக்காக இது சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் சேனாதிபதி குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் ஏராளமான காட்சிகள் எடுக்கப்பட்டு இருப்பதால் இதனை இரண்டு பாகமாக வெளியிட சங்கர் திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் அடுத்த பாகத்திற்கு தேவையான காட்சிகளில் கமல்ஹாசன் நடிக்க வேண்டி உள்ளதாம். இதை புரிந்து கொண்ட கமல்ஹாசன் தற்போது கூடுதலாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் அடுத்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும், அதற்கு அடுத்த ஆண்டு மூன்றாம் பாகம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Most Popular