Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentராம் சரண நடிக்கும் கேம்சேஞ்சர் என்னோட கதை தான்.. ஷங்கர் பாணியில் எழுதப்பட்ட அரசியல் கதை.....

ராம் சரண நடிக்கும் கேம்சேஞ்சர் என்னோட கதை தான்.. ஷங்கர் பாணியில் எழுதப்பட்ட அரசியல் கதை.. சஸ்பென்ஸை உடைத்த இயக்குநர்.. கோபத்தில் பிரம்மாண்ட இயக்குநர்

”மகான்” படத்திற்கு பின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2ம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நாளை மறுநாள் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் 1960களில் மதுரையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் படம் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் கதை நான் எழுதியது தான்.

அந்த கதை பணிகளை முடித்த பின், எனது குழுவில் இருந்த அனைவரும் இந்தப் படத்தின் கதை ஷங்கர் பாணியில் இருப்பதாக கூறினார்கள். அது அரசியல் கதை தான். அதுபோன்ற தீவிர அரசியல் கதையை சிறு வயதில் எடுப்பது கொஞ்சம் கடினமானது தான். அதேபோல் அந்த கதையில் பெரிய ஹீரோக்கள் தான் நடிக்க முடியும்.

- Advertisement -

இதனால் ஷங்கர் சாரை அழைத்து, இதுபோல் ஒரு அரசியல் கதை எழுதி இருக்கிறேன், கேட்க முடியுமா என்று கேட்டேன். பின் அவர் அழைத்து அந்த கதையை கேட்ட போது, அவருக்கு பிடித்திருந்தது. அதன்பின்னர் கதையை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டேன். அந்த கதைக்கு ஷங்கர் சார் எப்படி திரைக்கதை அமைத்துள்ளார், அதனை என்னவாக மாற்றியுள்ளார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஷங்கர் இயக்கி வரும் கேம்சேஞ்சர் கதையில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். அதேபோல் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணிகளில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular