மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களுக்கு பின் நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் கூட தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சிம்புவின் 48வது திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் படம் ரஜினிகாந்திற்காக எழுதிய கதை. ஆனால் இப்போது சிலம்பரசனுக்காக எடுக்கப்படுகிறது. இதற்காக பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏனென்றால் ரஜினிகாந்த் அளவிற்கு சிம்புவாலும் அவரின் ஸ்டைலில் செய்ய முடியும்.
இந்த படத்திற்கு இடையில் நடிப்பதற்காக ஏராளமான கதைகளை சிலம்பரசன் நடிக்காமல் தவிர்த்துள்ளார். என்ன நடந்தாலும், இதுதான் என் அடுத்தப் படம் என்று அவர் கூறினார். இந்த படத்திற்காக நடிகர் சிலம்பரசன் இன்னும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த படம் தாமதமாகவில்லை. படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது. இதனால் தயாரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் முழு காட்சிகளும் செட்டில் மட்டுமே எடுக்கப்படவுள்ளது. பாகுபலியை போல் முழு படமும் பீரியட் கதை தான். முழுக்க முழிக்க கமர்ஷியலாக, தர லோக்கல் பீரியட் படமாக வரும். டான்ஸ், சண்டை, ரொமான்ஸ் எல்லாத்திலும் சிலம்பரசன் அசத்தப் போகிறார். இன்னும் 3 மாதங்களில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜனவரியில் தொடங்கப்படும்.
அதன்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் முடிவடைந்த பின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும். தற்போது முழு படமும் டி2 தொழிற்நுட்பத்தில் டம்மி காட்சிகள் படம்மாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க்கவுள்ளனர். ஏனென்றால் ராஜாக்கள், கிங்டம் பாணியிலான கதை இது என்று கூறியுள்ளார்.