ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தயாரிப்பு செலவுகள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருப்பதால், தனுஷ் தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கடலூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. பீரியட் பிலிம் என்பதால், ஏராளமான நடிகர்கள் வித்தியாசமான லுக்கில் நடித்துள்ளனர்.
அதேபோல்புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து தனுஷ் நீண்ட தாடி மற்றும் தலைமுடியுடன் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், பிரபாஸின் சலார் மற்றும் ஷாரூக் கானின் டங்கி படங்கள் ரிலீஸாக உள்ளது.
இதனால் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸை தயாரிப்பு நிறுவனம் பொங்கலுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் விளம்பர பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ”இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்” என்று பாடல் ரிலீஸாகவுள்ளது.
இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். இதுவரை ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரின் காம்பினேஷனில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் அதிரி புதிரி ஹிட்டடித்துள்ளன. ஆனால் பீரியர் கதையில் உருவாகியுள்ள மிகமுக்கிய பாடலை தனுஷ் பாடியுள்ளதால், பாடல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.