மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என்று இயக்கிய 5 படங்களையும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதிலும் கடைசியாக இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்கள் ரூ.500 கோடிக்கும் அதிக செய்து வசூல் சாதனை படைத்தது. இதன்பின் கைதி – 2 படத்தின் பணிகள் நடக்கவிருந்தது.
ஆனால் திடீரென சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் ரஜினிகாந்த் ஆக்ஷன் கதையில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்தது. இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
வழக்கம் லோகேஷ் கனகராஜ் படங்களில் கேமியோ ரோலில் பெரிய நடிகர்கள் நடிப்பார்கள். அந்த வகையில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பெரியளவில் கொண்டாடப்பட்டது. வெறும் 10 நிமிடங்கள் நடித்த சூர்யாவின் சினிமா வாழ்க்கையே திருப்பி போடும் அளவிற்கான கதாபாத்திரமாக மாறியது.
தற்போது ரஜினிகாந்த் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க பெரிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஷாரூக் கானை அணுகிய போது, ஏற்கனவே பல படங்களில் கேமியோ ரோலில் நடித்ததால் இனி கேமியோ செய்ய வேண்டும் முடிவெடுத்துள்ளதாக ஒதுங்கியுள்ளார்.
இதன்பின் அந்த ரோலில் நடிக்க ரன்வீர் சிங்கிடம் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். கதையை கேட்ட அவர், உடனடியாக ஒப்பு கொண்டதாகவும், ஆனால் முழு கதை மற்றும் திரைக்கதையை கூறிய பின் ஒப்பந்தம் செய்யலாம் என்று தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரன்வீர் சிங்கின் முதல் நேரடியாக தமிழ்ப்படமாக இது இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.