Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentகுடும்பங்கள் கொண்டாடும் வெற்றி தான் போலயே.. அயலான் எப்படி இருக்கு? பொங்கலுக்கு விருந்து கொடுத்தாரா சிவகார்த்திகேயன்?...

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி தான் போலயே.. அயலான் எப்படி இருக்கு? பொங்கலுக்கு விருந்து கொடுத்தாரா சிவகார்த்திகேயன்? முழு விமர்சனம்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அயலான். ட்ரெய்லரிலேயே ஏலியன் பூமிக்கு வருவதை காட்டியுள்ளதால், இது மனிதர்களுக்கு ஏலியனுக்கும் இடையிலான திரைப்படம் என்று தெரிகிறது. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் ஏலியனை வில்லனாக காட்டி வந்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் தமிழில் வெளிவந்துள்ள முதல் ஏலியன் படத்திலேயே அதனை மாற்றி இருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்குள் சிதறி வரும் ஒரு மர்மமான பொருள் வில்லனின் கைகளில் கிடைக்கிறது. அதனை உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியின் தொடக்க புள்ளியாக வில்லன் மாற்ற நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் அந்த மர்ம பொருளை வில்லனிடம் இருந்து மீண்டும் தனது கிரகத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏலியன் தமிழ்நாட்டிற்கு வருகிறது. அதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, ஏலியனுக்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவினார், கடைசி ஏலியன் மீண்டும் தனது கிரகத்திற்கு சென்றதா என்ற கேள்விகளுக்கு பதிலாக அயலான் திரைப்படம் வெளியாகியுள்ளது. 

- Advertisement -

முதலில் ஏலியனை எந்தவித துருத்தலும் இல்லாமல் திரையில் காட்டியதற்காகவே அயலான் படக்குழுவுக்கும் கிராஃபிக்ஸ் குழுவுக்கும் பாராட்டுகளை சொல்லலாம். சிவகார்த்திகேயனின் தொடக்க காட்சிகள் கொஞ்சம் நிதானமாக சென்றாலும், ஏலியனின் வருகைக்கு பின் திரைக்கதை உச்சத்திற்கு செல்கிறது. அதன்பின் ஏலியனும் சிவகார்த்திகேயன் குழுவினரும் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது.

- Advertisement -

இடைவேளை காட்சியில் நல்ல சஸ்பென்ஸை வைத்த படக்குழு, இரண்டாம் பாதியில் சில காட்சிகள் கட் செய்திருக்கலாம். ஏலியன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து பலம் வாய்ந்த வில்லனை எப்படி வீழ்த்தினார்கள் என்பதை நோக்கியே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக கணிக்க முடிந்தாலும், 2.30 மணி நேரம் அமர வைத்ததிலேயே படக்குழு வென்றது என்று கூறிவிடலாம். எந்திரன் அளவிற்கு இல்லையென்றாலும் ஏஆர் ரஹ்மான் இசை படத்தில் மிரட்டலாக அமைந்துள்ளது.

ஆபாசம், கொடூர கொலை, ரத்தம் தெறிக்கும் சண்டை என்று எந்த தேவையில்லாத காட்சிகளும் இல்லாமல் குழந்தைகள், பெற்றோர், குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் படமாக அயலான் உருவாகியுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு குடும்பங்கள் திரள் திரளாக அயலான் படத்தை கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்.

Most Popular