3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா. கடந்த முறை கணவரை இயக்கிய ஐஸ்வர்யா, இம்முறை தந்தையை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த், கேமியோ ரோலில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியது. கிரிக்கெட் கதைக்களத்தில் மத அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் பிப்.9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் என்பதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் ஆடியோ இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கேஎஸ் ரவிக்குமார், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஷ்ணு விஷால் பேசும் போது, லால் சலாம் திரைப்படம் பெயருக்கு ஏற்றபடி அரசியலை மையமாக வைத்து தான் உருவாகியுள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மான் மற்றும் நண்பன் விக்ராந்த் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படத்துள்ள நான் தான் ஹீரோ என்பதே பெருமையாக உள்ளது. இந்த படத்தை பார்த்த பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது புரியும் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்துள்ளது, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.