இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், கீர்த்தனா பார்த்திபன், நந்திதா தாஸ், பசுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். ராமேஸ்வரம் வரும் இலங்கை அகதியான பெண் ஒருவர், அந்த முகாமில் குழந்தையை பெற்றுவிட்டு மீண்டும் இலங்கை சென்றுவிடுவாள். அதன்பின் அந்த குழந்தையை மாதவன் தத்தெடுத்து மாதவன் – சிம்ரன் தம்பதியினர் வளர்ப்பர்.
இதையடுத்து உண்மையான தாய் குறித்து அமுதா என்ற கதாபாத்திரத்திற்கு தெரிய வரும் போது, அவளின் பெற்றோரை சந்திக்க விரும்புவாள். இதன்பின் இலங்கைக்கு சென்று அந்த குழந்தை தனது உண்மையான அம்மாவை சந்திக்கும் காட்சி கிளைமாக்ஸாக இருக்கும். ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் கதைக்களமும், திரைக்கதையும், அதன் கருவும் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விவாதத்தத்தை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் போராளி கதாபாத்திரத்தில் நந்திதா தாஸ் நடித்திருந்தார். இவருக்கு தமிழ் டப்பிங் கொடுத்த குரல் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சையமான குரலாக இருக்கும்.
இந்த நிலையில் நந்திதா தாஸிற்கு குரல் கொடுத்தது நடிகை சுகன்யா என்று தெரிய வந்துள்ளது. இதனை பற்றி சுகன்யா பேசும் போது, பல்வேறு படங்களில் மதுரை, நெல்லை, கொங்கு என்று ஏராளமான தமிழ் பேசி இருக்கிறேன். அப்போது திடீரென இயக்குநர் மணிரத்னம் என்னை அழைத்து ஒரு கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்க வேண்டும். அதில் இலங்கை தமிழ் பேச வேண்டும் என்றார்.
அதற்கு நான் இலங்கை தமிழ் பேசும் சிலரை பரிந்துரை செய்தேன். ஆனால் என்னை ஒருமுறை நேரில் வந்து பேசுமாறு கேட்டு கொண்டார். அங்கு சென்ற பின் சில வசனங்களை டப்பிங் செய்தேன். அது படக்குழுவினருக்கு மிகவும் பிடித்துவிட்டது. தொடர்ந்து நான் வசனங்கள் சிலவற்றை மாற்றி பேசியது எழுத்தாளர் சுஜாதாரவுக்கு ஆச்சரியம் அளித்தது. பின்னர் 15 நிமிடங்களுக்கு மேல் என்னை பாராட்டினார். அது கொஞ்சம் சிறந்த அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.