Tuesday, May 21, 2024
- Advertisement -
HomeEntertainmentD50 தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படம்.. ராயனை அறிமுகப்படுத்தும் சன் பிக்சர்ஸ்.. வெளியான மாஸ்...

D50 தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படம்.. ராயனை அறிமுகப்படுத்தும் சன் பிக்சர்ஸ்.. வெளியான மாஸ் அப்டேட்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த திரைப்படம் கேப்டன் மில்லர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது. இருப்பினும் தயாரிப்பு தரப்பு லாபத்தை ஈட்டியதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் அவரின் 50வது படம் உருவாகி வருகிறது. இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுள்ள தனுஷ், வடசென்னையை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கான அறிமுக போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் படத்தை தொடங்கிய 2 மாதங்களில் தனுஷ் படப்பிடிப்பு பணிகளை முழுவதுமாக முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்க தொடங்கியுள்ளார். அதேபோல் மறுபக்கம் 50வது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறார். 

- Advertisement -

இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது. இதற்கான போஸ்டரிலேயே தனுஷின் தலையில் இருந்து இரத்தம் வழிவதை போல் போஸ்டர் வெறித்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ராயன் என்ற படத்தில் நடிக்கவிருந்தார். அதன் கதையை தனுஷ் எழுதியதாக கூறப்பட்டது. காத்தவராயன் என்ற பெயரின் பாதியை மட்டும் எடுத்து ராயன் என்று பெயர் வைக்கப்பட்டது. இதனால் தனுஷின் 50வது படத்தின் தலைப்பு ராயன் என்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Most Popular