இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் வணங்கான். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு முன் கதையில் சில மாற்றங்கள் செய்ய சூர்யா கோரினார். ஆனால் சூர்யாவின் கருத்தை ஏற்க முடியாததால், வணங்கான் படத்தை நிறுத்தப்பட்டது.
சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாலா கதை மீது நம்பிக்கை வைத்து அருண் விஜயை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். முதல்முறையாக பெரிய இயக்குநர் ஒருவரின் கதையில் நடிக்க வாய்ப்பு வந்ததால், அருண் விஜய் அனைத்து வகையிலும் தயாரானார். இதனை தொடர்ந்து அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் வணங்கான் படத்தில் இணைந்தனர்.
இதனை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிக்க முன்வர, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் பிள்ளையார் சிலையையும், இன்னொரு பக்கம் பெரியார் சிலையையும் கைகள் வைத்து அருண் விஜய் காணப்பட்டார்.
இந்த நிலையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் நடிகர் அருண் விஜய் அப்படியே வேறு மாதிரி லுக்கிற்கு மாறியுள்ளார். பிதாமகன் படத்தில் விக்ரம் எப்படி இருந்தாரோ, அப்படியே மிருகத்தை போல் எந்த வசனமும் பேசாமல் அதக்களப்படுத்தி இருக்கிறார். அதேபோல் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் பாலா படத்திற்கே உரித்தான வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர், கன்னியாகுமரி, காவல் நிலையம் என்று கன்னியாகுமரியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. அதிலும் கடைசி காட்சியில் அருண் விஜய் உறுமல் வேற லெவலில் உள்ளது. மேலும் இந்த படத்தில் அருண் விஜய் துப்புரவு தொழிலாளியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கும் நாயகிக்கும் இடையிலான உலகத்தில் 3வது தரப்பு தலையிடும் போது நடக்கும் பிரச்சனையே திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.