கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் ராயன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷ் 50வது படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷ் முதல்முறையாக மொட்டையடித்து வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.
நேற்று முன்தினம் இந்த படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஃபாஸ்ட் புட் கதை நடத்தி வருபவராக தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் காணப்பட்டனர். இந்த நிலையில் ராயன் படத்தின் கதை பாட்ஷாவை போல் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் படமான ராயன் கதையில், தனுஷ் சமையல் கலைஞராக நடித்துள்ளார். மிகப்பெரிய கேங்ஸ்டரான தனுஷ் அனைத்து பிரச்சனைகளையும் மறைத்து வேறு பகுதிக்கு வந்து அமைதியாக சமையல் கலைஞர் பணியாற்றி வருவது போலவும், ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்த பின் என்ன நடக்கிறது என்பதே ட்விஸ்டாகவும் வைக்கப்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே பாட்ஷாவை பின்பற்றி அந்த படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவே கஜேந்திரா மற்றும் ஜனா படங்களை இயக்கியுள்ளார். இருப்பினும் தனுஷ் இந்த பாணியிலான திரைக்கதையை அமைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பா.பாண்டி படத்திற்கு முன்பாகவே ராயன் படத்தின் கதையை தனுஷ் எழுதிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், தனுஷிற்கு இந்த படத்தில் ஜோடியே கிடையாது என்று சொல்லப்படுகிறது. அபர்ணா பாலமுரளி சந்தீப் கிஷனுக்கும், துஷாரா விஜயன் காளிதாஸ் ஜெயராமுக்கும் ஜோடியாக நடித்துள்ளனராம். முதல்முறையாக தனுஷ் ஜோடியில்லாமல் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் எஸ்ஜே சூர்யா வில்லன் என்று கூறப்படுகிறது.