Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentGOAT படத்தில் யுவன் கைகளை கட்டிப்போட்ட வெங்கட் பிரபு.. மொத்தமாக இத்தனை பாடல்கள் தானா?

GOAT படத்தில் யுவன் கைகளை கட்டிப்போட்ட வெங்கட் பிரபு.. மொத்தமாக இத்தனை பாடல்கள் தானா?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் GOAT. விஜய் மட்டுமல்லாமல் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேஹா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் ரிலீஸிற்கு முன்பாகவே GOAT படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

- Advertisement -

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டவை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் விஜய் 3 கெட்டப்களில் நடித்து வருகிறார். இளமையான விஜய், முதுமையான விஜய் மற்றும் 18 வயது விஜய் என்று 3 விதமான கெட்டப்களிலும் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜெர்மனி, ஐதராபாத், பிரான்ஸ், சென்னை, இலங்கை, நெதர்லாந்து என்று பல்வேறு நாடுகளிலும் நடைபெற்றது. அண்மையில் கேரமாவில் GOAT படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது சிறிய வயது கெட்டப்பில் விஜய் நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அமெரிக்காவில் டீ-ஏஜிங் டெக்னாலஜி மூலம் சிஜி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதேபோல் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மொத்தமாக 4 பாடல்கள் இடம்பெற உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த 4 பாடல்கள் மட்டுமல்லாமல் இரண்டு விஜய்-க்கும் பிரத்யேக பிஜிஎம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய கீதை படத்திற்கு பின் விஜய் உடன் யுவன் இணைந்துள்ளதால், மியூசிக்கல் ட்ரீட்டாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

- Advertisement -

இந்த நிலையில் GOAT படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி GOAT படத்தின் முதல் பாடலை வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகளில் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

Most Popular