Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentவசூலில் வலிமையை முந்தியதா லவ் டூடே? தியேட்டர்கள் டாப் 10 லிஸ்ட்டால் அதிர்ச்சி.. காரணம் என்ன?

வசூலில் வலிமையை முந்தியதா லவ் டூடே? தியேட்டர்கள் டாப் 10 லிஸ்ட்டால் அதிர்ச்சி.. காரணம் என்ன?

- Advertisement -

2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே அமைந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் இந்த ஆண்டு வெளியான பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வசூல் பெற்றது.

பிப்ரவரி மாதத்தில் வலிமை திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் பீஸ்ட், கே ஜி எஃப் திரைப்படமும் ஜூன் மாதத்தில் விக்ரம் திரைப்படமும் செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வரலாற்று வசூலை பெற்றது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் திரையரங்குகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தின் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் தங்களுடைய திரையரங்குகளில் எந்த திரைப்படம் டாப் 10 இடத்தை பிடித்திருக்கிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு பட்டியலை வெளியிடுவார்கள். அதில் கடந்த மாதம் வெளியான லவ் டுடே திரைப்படம் யாருமே எதிர்பாராத அளவில்  டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

பெரும்பாலான திரையரங்குகளில் முதல் இடத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் இடத்தில் விக்ரம் மூன்றாவது இடத்தில் பீஸ்ட் நான்காவது இடத்தில் கேஜிஎப் ஐந்தாவது இடத்தில் லவ் டுடே ஆறாவது இடத்தில் வலிமை திரைப்படம் இடம் பெற்று இருக்கிறது.இந்தப் பட்டியல் அஜித் ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் 98 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் எப்படி பட்டியலில் இவ்வளவு கீழ் இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபல திரைப்பட வணிக நிபுணர் ரமேஷ் பாலா , வலிமை திரைப்படம் இந்த ஆண்டில் டாப் மூன்றாவது இடத்தில் வசூல் சாதனை படைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் என்று அவர் கூறினார். இதன் காரணமாகத்தான் வலிமை இந்த பட்டியலில் கீழ் வரிசையில் இடம் பெற்று இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Most Popular