Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentசாகுந்தலம் முதல்நாள் வசூல்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. சமந்தா சினிமா வாழ்க்கையில் பெரிய அடி!

சாகுந்தலம் முதல்நாள் வசூல்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. சமந்தா சினிமா வாழ்க்கையில் பெரிய அடி!

நடிகை சமந்தாவின் சாகுந்தலம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், படத்தின் வசூலும் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் புராண கால கதையை மையமாக வைத்து உருவானது சாகுந்தலம் திரைப்படம். இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

- Advertisement -

புராணக்கதையில் வரும் சகுந்தலா கதாபாத்திரத்தை மையமாக வைத்து,
இதற்கு முன்னரே நிறைய படங்கள் வந்திருக்கின்றன. சில டிவி தொடர்களும் வந்துள்ள நிலையில், அதனை இந்த கால ரசிகர்களுக்கு புரியும் வகையில் குணசேகரன் படமாக கொடுத்துள்ளார். நடிகை சமந்தா நோய் பாதிப்பு பிரச்சனையில் சிக்கும் முன்னதாக இந்த படத்தில் நடித்திருந்தார். சமந்தா ஸ்க்ரீனில் அழகு பதுமையாக இருக்கிறார். சமந்தா மட்டுமே இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக இருக்கிறார்.

காதல் காவியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்களை கொடுத்து வருகின்றனர். சீரியல் போன்று படம் இருப்பதாகவும் சிலர் கலாய்த்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த சமந்தா ரசிகர்களும்கூட படத்தை பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதேநேரம் படத்தின் வசூல் கணிசமான அளவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சமந்தாவின் ரசிகர் பட்டாளத்தில் வசூல் சரிவிற்கு செல்லாது என கூறப்பட்டது. ஆனால் முதல்நாளில் படத்தின் வசூல் எதிர்பாத்த அளவு கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் முதல்நாளில் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 50 முதல் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக தயாரான ஒரு திரைப்படம் சகுந்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனால் ருத்ரமாதேவி படத்தை எடுத்து இயக்குநர் குணசேகரன் எப்படி அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையை முடித்துவிட்டாரோ, அதேபோல் சாகுந்தலம் படத்தை எடுத்து சமந்தாவின் தெலுங்கு சினிமா கரியரை குணசேகரன் முடித்துவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Most Popular