Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainment1,000 சண்டை கலைஞர்கள்.. ஆர்ஆர்ஆர் பாணியில் படமாக்கும் இயக்குனர் ஷங்கர்.. கேம் சேஞ்சர் கிளைமாக்ஸால்...

1,000 சண்டை கலைஞர்கள்.. ஆர்ஆர்ஆர் பாணியில் படமாக்கும் இயக்குனர் ஷங்கர்.. கேம் சேஞ்சர் கிளைமாக்ஸால் மிரளும் ராம் சரண்!

இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட படமான கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பெரிய அளவில் உருவாக்க உள்ளதாகவும், அதில் ராம்சரண் 1,000 ஸ்டண்ட் மேன்களுடன் சண்டையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்நியன் படத்தில் ஆயிரம் சண்டை கலைஞர்களுடன் இயக்குனர் ஷங்கர் கராத்தே சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி பலரையும் கவர்ந்திருந்தது. தற்போது மீண்டும் பிரம்மாண்ட சண்டை காட்சியை ஆர்ஆர்ஆர் பாணியில் ஷங்கர் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் தற்போது, 2 பிரமாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் இந்தியன்-2 படமும், ராம்சரணின் கேம் சேஞ்சர் படமும்தான் அவை. இந்தியன்-2 படத்தை லைகாவும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. கேம் சேஞ்சர் படத்தை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

அண்மையில் தைவான் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்தியன்-2 படத்தின் சண்டை காட்சியை படமாக்கினார் சங்கர். இதை முடித்த கையுடன் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கில் தீவிரமானார். அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

படத்தில் எந்த காட்சியை எடுத்தாலும் பிரமாண்டமாக எடுக்க நினைக்கும் ஷங்கர், கேம் சேஞ்சர் படத்திலும் முக்கியமான பிரமாண்ட காட்சி ஒன்றை வைத்துள்ளார்.‌ கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் ராம்சரண் ஆயிரம் ஸ்டண்ட் மேன்களுடன் சண்டையிடுவது போன்ற காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சண்டைக்காட்சியை அன்பறிவு மாஸ்டர்கள் தான் வடிவமைத்து உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஷூட்டிங் ஏப்ரல் 24ஆம் தேதி ஷம்ஷாபாத்தில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சண்டைக் காட்சிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கிளைமேக்ஸ் ஷூட்டிங்கில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Most Popular