Wednesday, October 8, 2025
- Advertisement -
HomeEntertainmentஜூலையில் தொடங்கும் தனுஷ் 50வது படத்தின் ஷூட்டிங்… 100 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்…...

ஜூலையில் தொடங்கும் தனுஷ் 50வது படத்தின் ஷூட்டிங்… 100 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்… இது வட சென்னை கேங்ஸ்டர் மூவி!

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமே தன்னுடைய எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தெலுங்கில் நேரடியாக நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -

இதை எடுத்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தனுஷ்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

- Advertisement -

இதுபோக விஷ்ணு விஷால் மற்றும் நடிகை துஷாரா விஜயனுக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. தனது 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறது.

- Advertisement -

கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தொடர்ந்து, தனது ஐம்பதாவது படவேளையில் ஈடுபடும் தனுஷ் ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறதாம். இதற்கான பிரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது சூடு பிடித்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Most Popular