கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், இளம் இயக்குநருடன் கைகோர்க்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல படங்களில் பிசியாக நடித்துவரும் தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, டி50 படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். அதேபோன்று அடுத்தடுத்து முன்னணி மற்றும் இளம் இயக்குநர்களுடன் கைகோர்க்கிறார் தனுஷ்.
தனுஷ் தற்போது நடித்துவரும் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்படுகிறது. இந்த படத்திற்கான கெட்டப்பில் பொது இடங்களில் நீளமான முடி மற்றும் தாடியுடன் தனுஷ் காணப்படுகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகுதான் தனுஷ் தனது இயக்கத்தில் இரண்டாவது படத்தை எடுக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவரது இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் பவர் பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.
இதுபோல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல படங்களில் பிசியாகியுள்ள தனுஷ், அடுத்து ஒரே இளம் இயக்குநருடன் கைகோர்க்கிறார். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவண் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
3 ஸ்டோரி லைன்களை தனுஷிடம் சொல்லியிருப்பதாகவும், தன்னுடைய வீரன் படத்தின் வேலைகள் முடிந்ததும் தனேஷூக்காக ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தான் இயக்கிய மரகத நாணயம் படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் சரவண் குறிப்பிட்டுள்ளார்.