Wednesday, November 20, 2024
- Advertisement -
HomeEntertainmentஓ… இதுதான் மாமன்னன் படத்தின் கதையா… செம்ம மேட்டர் போங்க… திரையரங்குகளை தெறிக்க விட தயாராகும்...

ஓ… இதுதான் மாமன்னன் படத்தின் கதையா… செம்ம மேட்டர் போங்க… திரையரங்குகளை தெறிக்க விட தயாராகும் ரசிகர்கள்…

இயக்குனர் மாரி செல்வராஜ் மூன்றாவது திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தந்தைக்கும் மகனுக்குமான உறவும், இறுதியில் இருவரும் இணைந்து எதிரிகளைப் பந்தாடுவதும் தான் மாமன்னன் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மாரி செல்வராஜின் முதல் படம்

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே முக்கிய இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு காட்சிகளும் விவரித்து சாட்டையடி கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார் மாரி செல்வராஜ்.

முதல் படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் உடன் இணைந்த அவர், கர்ணன் படத்தை இயக்கினார். 1990களின் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம், பொடியன்குளம் எனும் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உண்டான காட்சி அமைப்பின் மூலம் விவரித்தார் மாரி செல்வராஜ்.

- Advertisement -

எதிர்பார்ப்பை எகிற வைத்த மாமன்னன்

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவுடன் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியுடன் அவர் கைகோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டது. சேலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலரும் கவனிக்க வைத்தது. படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இரண்டரை மணி நேரம் ஓடும் மாமன்னன்

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிய உள்ள நிலையில், படத்தின் டிரைலரும் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசி காட்சியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் கையில் ஆயுதங்களுடன் எதிரிகளைப் பந்தாட காத்திருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சி திரையரங்குகளை அதிரசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது. முதலாம் பாதி ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகவும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை இதுதானா?

இந்த நிலையில் தற்போது மாமன்னன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதிவீரன் எனும் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும், சிறுவயதில் தனது தந்தையான வடிவேலுவுடன் ஏற்பட்ட மோதலால் அவரிடம் பேசாமல் இருப்பது போன்ற கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அப்போது ஊருக்குள் நிகழும் பிரச்சனைகளை வடிவேலு ஒற்றை ஆளை சமாளிப்பது உணர்ந்து, உதயநிதியும் களத்தில் இறங்குவதாகவும், இறுதியில் இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்வதுதான் மாமன்னின் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. வரும் 23ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular