விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதனால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாஸ் படத்தை கொடுக்க வேண்டிய நிலையில் தளபதி விஜய் உள்ளார்.
மீண்டும் லோகேஷ் – விஜய் கூட்டணி
இந்த சூழலில் மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் – லோகேஷ் கனஜராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. லியோ என்று பெயரிடப்பட்டு காஷ்மீரில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
எல்சியூ-வில் லியோ?
இதையடுத்து சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் விக்ரம் புகழ் ஜாபர், கைதி பட வில்லன் என்று ஏராளமான நடிப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் லோகேஷ் கனகராஜ் எல்சியு-வில் லியோ படம் இணையுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நா ரெடி பாடல் உள்ளிட்ட வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதன்பின் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக அறிவித்தார். 6 மாதங்களில் 126 நாட்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் லியோ படத்தின் பிசினஸும் விண்ணை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியது. தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன.
வெளிநாடு பறந்த தளபதி
விரைவில் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல் ஒரு படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொடுத்ததும் தளபதி விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். எந்த நாடு சென்றுள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் சென்னை விமான நிலையத்தில் விஜய் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனால் வெளிநாட்டில் இருந்து நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக தான் சென்னை திரும்புவார் என்று தெரிய வருகிறது. இதனால் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து லியோ விளம்பரப் பணிகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.