Thursday, November 21, 2024
- Advertisement -
HomeEntertainmentரூ.100 கோடியை தாண்டிய தங்கலான் பட்ஜெட்.. பா.இரஞ்சித் செய்த சரியான சம்பவம்.. சோகத்தில் ஸ்டுடியோ க்ரீன்...

ரூ.100 கோடியை தாண்டிய தங்கலான் பட்ஜெட்.. பா.இரஞ்சித் செய்த சரியான சம்பவம்.. சோகத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்

அசாதாரண கதைகள், சாதாரண கதை என்ற எந்த பாரபட்சமும் பார்க்காமல் தன்னை உடலையும் மனதையும் கதாபாத்திராத்திற்கு ஏற்றவாறு மாற்றி கொண்டு முழு ஈடுபாட்டுடன் நடித்து வருபவர் விக்ரம். ஆனால் அண்மை காலமாக விக்ரமின் உழைப்பிற்கு ஏற்ற கதைகள் அமையாததால், அவரின் படங்கள் தோல்வியடைந்து வந்தன.

- Advertisement -

ஐ, பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், சாமி ஸ்கொயர்,  ஸ்கெட்ச், கோப்ரா, மஹான் என அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால் விக்ரம் துவண்டு போயிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் சிறப்பாக நடித்து வசூல் வேட்டையாடினாலும், அது விக்ரமின் படமாக மட்டும் சொல்ல முடியவில்லை. இதனால் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கிறார் விக்ரம்.

இந்த நிலையில் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை மூலம் தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்பின் கேஜிஎஃப் பின்னணி கதை என்றதால், அந்த எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்றது.

- Advertisement -

பின் ”தங்கலான்” என்று டைட்டில் வீடியோ வெளியான போது சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் விக்ரம் பிறந்தநாளன்று வெளியான மேக்கிங் வீடியோ பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படியான காட்சிகளை பாலிவுட்டில் கூட பார்த்ததே இல்லை என்று நேரடியாக பாராட்டினார்.

- Advertisement -

இந்த படத்தின் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் தங்கலான் பட்ஜெட் பற்றி ஸ்டுடியோ க்ரீன் சிஇஒ தனஞ்செயன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், தங்கலான் படத்தின் பட்ஜெட் தொடக்கத்தில் கொஞ்சம் குறைவாகவே கணக்கிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கி பாதி முடிந்த போதே, எங்களின் பட்ஜெட்டை கடந்துவிட்டது. தற்போது தங்கலான் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சென்றுவிட்டது. ஆனால் அதனை பற்றி கவலைப்படவில்லை. தங்கலான் எங்களுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுக்கும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Most Popular