Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentஉண்மையான கேப்டன் மில்லரின் கதையல்ல.. ஆனால் போராளியின் கதை தான்.. அருண் மாதேஸ்வரன் பேச்சு

உண்மையான கேப்டன் மில்லரின் கதையல்ல.. ஆனால் போராளியின் கதை தான்.. அருண் மாதேஸ்வரன் பேச்சு

திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் நீண்ட தலைமுடி, தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். கடந்த மாதம் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

- Advertisement -

இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷை வேட்டையாட காத்திருக்கும் ஆங்கிலேயர்கள் அவரின் தலைக்கு விலை வைத்துள்ள போஸ்டருடன் தொடங்கும் கேப்டன் மில்லர் டீசரில், துப்பாக்கியோடு அனைத்து நடிகர்களும் தோன்றுகிறார்கள்.

- Advertisement -

பெரும் படையை எதிர்த்து ஒற்றை ஆளாக நிற்கும் தனுஷ், கடைசி துப்பாக்கியுடன் போராடும் தொடங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் டீசரின் ஒரு இடத்தில் கூட தனுஷ் எந்த வசனத்தையும் பேசவில்லை. நீண்ட அமைதியுடன் தனது போஸ்டரை மடித்து பையில் வைத்து கொள்ளும் காட்சியுடன் டீசர் முடிவடைகிறது.

இந்த டீசர் குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசும்போது, என் முந்தையப் படங்களைப்போல் அதிகமான வன்முறைக் காட்சிகள் கேப்டன் மில்லரில் இருக்காது. எல்லாரும் பார்க்கும் படியாகவே எடுத்திருக்கிறேன். இது உண்மையான கேப்டன் மில்லர் கதை அல்ல. ஆனால், ஒரு போராளியின் கதையாகவே உருவாகியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Most Popular