Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentஅஜித்துடன் மல்லுக்கட்ட போகும் பிக் பாஸ் ஹீரோ… துபாயில் தொடங்குகிறது படப்பிடிப்பு… இந்த முறை மகிழ்...

அஜித்துடன் மல்லுக்கட்ட போகும் பிக் பாஸ் ஹீரோ… துபாயில் தொடங்குகிறது படப்பிடிப்பு… இந்த முறை மகிழ் திருமேனிடமிருந்து ஏ.கே. ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது…

- Advertisement -

சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களில் நடித்த அஜித்குமார், அடுத்ததாக ஹெச் வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக, இயக்குனர் மகிழ்திருமேனியுடன் இணைய போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது.

முதலில் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் தான் எடுப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினார். இதன் பிறகு, மகிழ் திருமேனி களத்திற்கு வர பரபரப்பாக பேசப்பட்டது. அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி இது குறித்து அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று டைட்டிலும் வைக்கப்பட்டது.

- Advertisement -

விடாமுயற்சியின் எழுத்து வடிவத்தில் சுற்றி இணையம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் மேப் லோகோவும் அதில் இருந்ததால், மகிழ் திருமேனி என்னமோ சொல்ல வருகிறார் என்று ஏகே ரசிகர்கள் ஆர்வத்தை வளர்த்தனர். புதுமையான கூட்டணியால் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, கடைசியில் என்னமோ ஏமாற்றம்தான் மிஞ்சியது.

- Advertisement -

படத்திற்கான வேலைகளில் மகிழ் திருமேனி பரபரக்க, அஜித் ஹாயாக பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற ஆரம்பித்தார். ஏகே ஒருவரால் தான் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. அவர் ஊர் சுற்றுவதில் தவறே இல்லை என்றும், ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகிய பின்னர் இப்படி அலட்சியமாக நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் பலரும் கேள்விகளை வீசி வந்தனர்.

நாளுக்கு நாள் படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாததால், விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்த தயாரிப்பு நிறுவனமான லைகா, படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவித்தது. இந்த நிலையில், விடாமுயற்சி படக்குழு முதற்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளது. படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிப்பதாகவும், முக்கிய வில்லனாக சஞ்சய் தத் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் அர்ஜுன் தாஸும் படத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி படத்தில் அவர் இல்லையாம். அவருக்கு பதில் பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஆரவ்வை நடிக்க வைக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறாராம். ஏற்கனவே உதயநிதியுடன் அவர் எடுத்த கலகத் தலைவன் திரைப்படத்தில் ஆரவ் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாகவும், துபாய் மற்றும் அஜர்பைஜானில் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது போக வலிமை திரைப்படத்தில் நடித்த ஹீமா குரேஷியும், விடாமுயற்சியில் இருக்கிறாராம். அனிருத் இசையமைப்பில் இந்த திரைப்படத்தை கிரைம் திரில்லராக உருவாக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறாராம்.

Most Popular