Entertainment

அஜித்குமார் வீட்டில் நடந்த சோக சம்பவம்.. 86 வயதில் காலமான தந்தை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணியம். சுப்ரமணியத்திற்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் அஜித்குமார் இரண்டாவது மகன். மற்ற இரண்டு மகன்களின் பெயர் அனில் குமார், அனுப் குமார். இவர்களில் ஒருவர் தொழிலதிபராகவும், மற்றொருவர் ஐஐடி மெட்ராஸில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் தாயார் ஏற்கனவே உடல்நலக்குறைவால் உயிரிழக்க தந்தை சுப்ரமணியம் மட்டும் இருந்தார். அவர் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் இவ்வளவு நாள்கள் வசித்து வந்தார். வயதுமூப்பி காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு முழு ஓய்வில் இருந்தார் சுப்ரமணியம். இந்தச் சூழலில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

அஜித்குமார் இப்போது தனது மனைவி ஷாலினியுடன் வேர்ல்ட் டூரில் இருப்பதாக தெரிகிறது. அவரது தந்தையின் இறுதிச்சடங்கு இன்று காலை பெசண்ட் நகரில் இருக்கும் அஜித்துடைய வீட்டில் நடைபெற இருக்கிறது. எனவே அஜித் தமிழ்நாடு திரும்பிவிட்டாரா இல்லை விரைவில் அவர் தமிழ்நாடு திரும்பிவிடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

தந்தையை இழந்திருக்கும் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல் திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய நட்சத்திரங்களும் அஜித்குமாரின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top