குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட கிராமத்துப் பின்னணியில் படங்களை இயக்கி வெற்றிகளை கொடுத்தவர் இயக்குநர் முத்தையா. அண்மையில் முத்தையா இயக்கத்தில் வெளியாகிய விருமன் மற்றும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்றது.
குறிப்பாக ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் மோசமான விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டது. இருப்பினும் வசூலில் அந்தப் படம் நல்ல லாபத்தையே கொடுத்ததாக தகவல் வெளியாகியது. இதனால் இயக்குநர் முத்தையா அடுத்ததாக எந்த ஹீரோவுடன் இணைய உள்ளார் என்ற கேள்வி எழுந்தது.
முன்னணி நடிகர்கள் பலரும் கையை விரித்த நிலையில், இயக்குநர் முத்தையா நடிகர் அருண் விஜயிடம் கதை ஒன்றை சொல்லி ஓகே செய்துள்ளார். ஏற்கனவே நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர் 1 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் வெளியாகிய அருன் விஜய் வெளியாகிய யானை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில், மீண்டும் கிராமத்து பின்னணியை கொண்ட கதையை தேடி வந்தார். இதனால் சமயம் பார்த்து கதையை சொன்ன முத்தையாவுக்கு உடனடியாக ஓகே சொல்லியுள்ளார் அருண் விஜய்.
வணங்கான், மிஷன் சேப்டர் 1 உள்ளிட்ட நல்ல லைன் அப் வைத்திருக்கும் அருண் விஜய், அழுக்கு வேட்டி இடுப்பில் டவுசர் அணிந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முத்தையா படத்தில் வரும் ஹீரோக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்பதால், அருண் விஜய்-க்கு முத்தையா ஸ்டைல் படம் சரியாக வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.