Friday, April 4, 2025
- Advertisement -
HomeEntertainmentபகவதி படத்திற்கு பின்பு விஜயுடன் மீண்டும் இணையும் ஜெய்… மீண்டும் அண்ணன் தம்பி படமா? என...

பகவதி படத்திற்கு பின்பு விஜயுடன் மீண்டும் இணையும் ஜெய்… மீண்டும் அண்ணன் தம்பி படமா? என குழப்பத்தில் ரசிகர்கள்… சீக்ரைட்டை ஓபன் செய்வாரா வெங்கட் பிரபு!

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

எதிர்பார்ப்புகளை எகிற செய்த லியோ

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.
லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் பாடல்களின் வரிகளும் புதுவித அனுபவத்தை தந்துள்ளது.

மூன்று மாதங்கள் ஓய்வெடுக்கும் விஜய்

லியோ படத்திற்கு பிறகு விஜயின் அடுத்த படத்தைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு அப்படத்தை இயக்கவுள்ளார். இந்த செய்திதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கிறது. விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படம் வித்யாசமான ஜானரில் இருக்கும் என்றும், அதே சமயத்தில் கமர்ஷியல் படமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

- Advertisement -

படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக ஜோதிகாவை நடிக்க வைக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. படத்திற்கு வழக்கம்போல வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பிறகு விஜயுடன் யுவன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

விஜய் படத்தில் ஜெய்

அக்டோபர் மாதம் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் நிலையில், அந்த மாதத்திலேயே விஜய் – வெங்கட் பிரபு படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் ஜெய்யும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பகவதி படத்தில் விஜய்யுடன் ஜெய் நடித்திருந்தார். அண்ணன் தம்பி பாசமாக உருவாகி இருந்த அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் மீண்டும் விஜய் – ஜெய் இருவரும் இணைந்திருப்பதால் படம் மீண்டும் அண்ணன் தம்பி பாசமாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular