Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதி 68ல் இணைந்த மலையாள நடிகர்.. சரோஜா வில்லனை தூக்கிய வெங்கட் பிரபு.. போடு சக்க...

தளபதி 68ல் இணைந்த மலையாள நடிகர்.. சரோஜா வில்லனை தூக்கிய வெங்கட் பிரபு.. போடு சக்க தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. அதேபோல் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

- Advertisement -

கேரளாவிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் கேஜிஎஃப். ஜெயிலர், பீஸ்ட் படத்தின் சாதனைகளை தகர்த்துள்ளது. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த வாரம் புதன் கிழமை வரை விடுமுறை நாள் என்பதால், 10 நாட்களுக்கு லியோ ஃபீவர் குறையாது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

இதனால் விஜய் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல் செய்த படமாகவும் லியோ இருக்கும் என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் லியோ படத்தை பற்றிய கவலையே இல்லாமல், தளபதி விஜய் அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்திற்கான பூஜை அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற்றது. அந்த பூஜையில் பிரசாந்த், பிரபுதேவா, பிரியங்கா மோகன், ஸ்னேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தின் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் மைக் மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய் இரு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். அதற்காக அமெரிக்காவில் பிரத்யேக தொழிற்நுட்பத்தில் லுக் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. அங்கு சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், திலீப் சுப்பராயன் அதனை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ஜெயராமும் தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மை காலமாக நடிகர் ஜெயராம் ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் இதே கூட்டணி துப்பாக்கி படத்தில் நடித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா படத்திலும் ஜெயராம் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular