Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் படம்.. யாரு வில்லன் தெரியுமா? சரியான ட்விஸ்ட் கொடுத்த...

விஜய் சேதுபதி – மிஷ்கின் இணையும் படம்.. யாரு வில்லன் தெரியுமா? சரியான ட்விஸ்ட் கொடுத்த படக்குழு

இயக்குநர் மிஷ்கின் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறிய கதாபாத்திரம் ஒன்றில் கேமியோ ரோலில் நடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தின் விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக மீண்டும் அவருடன் கைகோர்த்துள்ளார் மிஷ்கின்.

- Advertisement -

இதனை மிஷ்கின் வெளிப்படையாகவே அறிவித்தார். விஜய் சேதுபதியை வைத்து அடுத்ததாக ஒரு படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்காக எஸ்.தாணு கதைகள் கேட்டு வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் கோரிக்கை அடிப்படையில் மிஷ்கினிடம் தாணு கதை கேட்டார்.

மிஷ்கின் சொன்ன த்ரில்லர் கதை பிடித்துப்போக உடனடியாக அதற்கு திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக தயாரிப்பாளர் தாணு, மிஷ்கினுக்கு பிரத்யேக அலுவலகம் ஒன்றையும் அமைத்து கொடுத்தார். இந்த நிலையில் ப்ரீ புரோக்‌ஷன் பணிகள் முடிவுக்கு வந்த நிலையில், படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

- Advertisement -

இந்த படத்தின் விஜய் சேதுபதி, ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. சரோஜா படத்திற்கு பின் மீண்டும் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் திரைக்கதையில் ரயில் முக்கியமான பங்கு வகிப்பதால், படத்திற்கு தி ட்ரெயின் என்று டைட்டில் வைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

கடந்த சில மாதங்களாக விஜய் சேதுபதி நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் மட்டுமே தமிழில் நடித்து வந்தார். மற்றபடி பாலிவுட் படங்களில் தான் விஜய் சேதுபதியின் கவனம் இருந்தது. இந்த நிலையில் மிஷ்னுடன் விஜய் சேதுபதி இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular