Friday, November 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஜப்பான் தோல்வியால் பதற்றம்.. 3 படங்களில் தாவி தாவி நடிக்கும் கார்த்தி.. வெற்றிமாறனின் ஆஸ்தான இயக்குநருடன்...

ஜப்பான் தோல்வியால் பதற்றம்.. 3 படங்களில் தாவி தாவி நடிக்கும் கார்த்தி.. வெற்றிமாறனின் ஆஸ்தான இயக்குநருடன் இணைகிறார்!

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படுதோல்வியை சந்தித்தது. ட்ரீன் வாரியர் நிறுவனம் சார்பாக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜப்பான் திரைப்படம் முதலீடை கூட மீண்டும் பெற முடியாமல் தோல்வியடைந்தது. முத்திரை பதிக்க வேண்டிய படத்தில் கார்த்தி சறுக்கியதால் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுக்க தீவிரமாக உள்ளார்.

- Advertisement -

தற்போது 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மற்றொரு ஹீரோவாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். கிராமிய கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கும்பகோணம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் சூதுகவ்வும் படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ஜப்பான் படத்தின் படப்பிடிப்பின் போதே இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வா வாத்தியாரே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோல் கடந்த ஆண்டு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் சிறந்த விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ், நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநராக அடுத்த படத்தை இயக்குவதற்கு நடிகர் கார்த்தியிடம் கதை கூறி ஓகே செய்துள்ளார்.

- Advertisement -

இதையடுத்து இயக்குநர் தமிழ் கார்த்திக்கு கூறிய கதைக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த 3 படங்களின் படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார். அதன்பின் பிரம்மாண்டமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Most Popular