Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainment200 கோடி தங்கத்தை ஓட்டை போட்டு அபேஸ்.. ”ஜப்பான்” டீசரில் தரமான சம்பவம்.. ஸ்வாக்கா இருக்காருய்யா...

200 கோடி தங்கத்தை ஓட்டை போட்டு அபேஸ்.. ”ஜப்பான்” டீசரில் தரமான சம்பவம்.. ஸ்வாக்கா இருக்காருய்யா கார்த்தி!

விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்களுக்கு பின் கார்த்தி தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜிப்ஸி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி ”ஜப்பான்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ட்ரீன் வாரியர் பிக்சர் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல், விஜய் மில்டன், சுனில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ”ஜப்பான்” என்று தலைப்பிடப்பட்ட நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஒஅடம் சென்னையில் நடைபெற்ற புகழ்பெற்ற நகைக்கடையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுருட்டை முடி, கழுத்தில் நகைகள், வித்தியாசமான உடைகள், தங்கப்பல் என்று கார்த்தியின் லுக்கே வேற மாதிரி அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டீசரிலேயே அவரது அறிமுகம், இந்தியாவிலேயே 182 கொள்ளை வழக்குகள் ஜப்பான் மீது இருப்பதாகவும், பல மாநில போலீசார் அவரை தேடி வருவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் போலீஸ் உடன் ஆடும் ஆடுபுலி ஆட்டம் மட்டுமே படமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் கைதி படத்தை போல் பெரிய துப்பாக்கியான M134 பயன்படுத்தி வில்லன்களை வேட்டையாடுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இதனால் அதுவே கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா அக்.28ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா கொங்கரா உட்பட ஏராளமான இயக்குநர்கள், நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தின் 25வது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Most Popular