Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாதிருப்பங்கள் நிறைந்த தளபதி 68...நடிகை பார்வதி நாயர் பதிவு

திருப்பங்கள் நிறைந்த தளபதி 68…நடிகை பார்வதி நாயர் பதிவு

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், கோடிட்ட இடத்தை நிரப்புக, உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.

- Advertisement -

இவர் ஒரு மலையாள நடிகை ஆவார் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் தான் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் ஒன்றிரண்டு திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் தளபதி விஜயின் 68வது திரைப்படமான “கோட் “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்தத் திரைப்படத்தின் அவருடைய கதாபாத்திரத்தை பற்றியும் அதன் அனுபவத்தை பற்றியும் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.

- Advertisement -

கோட் திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது. இதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் தைரியமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்த திரைப்படம் நிறைய அனுபவங்களையும், ஆக்சன் களையும், திரில்லர்களையும் கலந்தவையாக அமைந்திருக்கும் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் முழுவதும் எதிர்பாராதவிதமான திருப்பங்களை கொண்டிருக்கும். தளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மற்றும் அவருடைய முகம் அழகு கடவுளால் அருளப்பட்டது என்று நடிகர் விஜய் நடிக்கும் பார்வதி நாயர் பாராட்டி இருக்கிறார்.

திரைப்படம் முழுவதும் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.

பார்வதி நாயரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வளவு ட்விஸ்டுகள் நிறைந்த தளபதியின் திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

Most Popular