Sunday, May 12, 2024
- Advertisement -
Homeசினிமாகங்குவாவின் மாஸ் அப்பேட்..! சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி.. சூர்யாவின் திட்டம் நிறைவேறுமா..?

கங்குவாவின் மாஸ் அப்பேட்..! சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி.. சூர்யாவின் திட்டம் நிறைவேறுமா..?

நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் நேரடியாக ஓடிடியிலேயே ஜெய் பீம் , சூரரைப் போற்று போன்ற திரைப்படங்களை வெளியிட்டு பல தேசிய விருதுகளைப் பெற்றார் நடிகர் சூர்யா.

- Advertisement -

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட சிங்கம் 3, காப்பான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல திரைப்படங்கள் அவருக்கு படுதோல்வி அளித்தது. அதேபோல் கொரோனாவிற்கு பிறகு திரையரங்கில் வெளிவந்த எதிர்க்கும் துணிந்தவன் திரைப்படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

எல்லாவற்றிலும்  சூரியாவின் நடிப்பிற்கு எந்த குறையும் இல்லை ஆனால் சிறந்த கதைக்களம் அமையாததால் அந்த திரைப்படங்கள் நல்ல ரிச்சை  அடைவது இல்லை என்பதை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் சூர்யா திரைப்படத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக சமீபத்தில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தின் அப்ரோர் கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோல் இத்திரைப்படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார் .

- Advertisement -

இந்நிலையில் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் முடிவடைந்தது இதைத்தொடர்ந்து திரைப்படத்தின் உடைய டப்பிங் வேலைகள் துவங்கி விட்டது என்று தகவலும் வெளியாகிறது இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா, தன்னுடைய டப்பிங் பணிகளை துவங்கியதற்கான அடையாளமாக நடிகர் சூர்யா டப்பிங் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் மீது ஆயிரம் கோடி ரூபாய் வசூல் வரை எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு பெரிய நடிகரின் திரைப்படமும் தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் வெளிவருவது இல்லை. அதிலும் வரக்கூடிய ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்க இருப்பதால் எல்லா திரைப்படங்களுமே தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது .

நடிகர் சூர்யாவும் தன்னுடைய இந்த திரைப்படத்தை தேர்தல் முடிந்தவுடன் முதல் திரைப்படமாக திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular