Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentகாக்கா - கழுகு கதையை தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. விஜய் பிடித்திருக்கும் இடம் சாதாரணம் கிடையாது.. அரசியலிலும்...

காக்கா – கழுகு கதையை தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. விஜய் பிடித்திருக்கும் இடம் சாதாரணம் கிடையாது.. அரசியலிலும் சாதிக்க ரஜினிகாந்த் வாழ்த்து!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரை மணி நேரத்திற்கு மேலாக வரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதேபோல் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் பிப்ரவரி 9ல் ரிலீஸாகவுள்ளது.

- Advertisement -

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், லால் என்றால் சிவப்பு.. லால் என்றால் வயன்ஸ்.. லால் என்றால் புரட்சி.. ஐஸ்வர்யா அந்த புரட்சியை தான் கையில் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா முதல்முறையாக இந்த படத்தை பற்றி என்னிடம் பேசும் போது, இது தேசிய விருது வாங்கும் சொன்னாங்க.. அப்போவே நான் பேக் அடித்துவிட்டேன்.

நான் விருது வாங்கும் படங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் பணம் வேண்டுமல்லவா.. ஆனால் கதையை கேட்ட பின், நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இந்த படத்தின் கதையை எடுத்து கொண்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகினார் ஐஸ்வர்யா. இறுதியாக லைகா நிறுவனத்தின் தமிழ்க் குமரன் தான் ஓகே சொன்னார். அப்போது நான் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இல்லை.

- Advertisement -

ஆனால் விஷ்ணு விஷாலிடம் ஒரு பெரிய நடிகர் அல்லது புது முகம் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் ஒரு கட்டத்தில் நானே நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இதனை ஐஸ்வர்யாவிடம் கூறிய போது, அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அப்போது அவருக்கு நான் நடிப்பதே தேவையாக இருந்தது. ஏனென்றால் கொஞ்சம் சென்சிட்டிவான கதை இது.

- Advertisement -

இந்த படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால். அவர் ரொம்ப ஸ்மார்ட்டான நடிகர். பல்வேறு விஷயங்களை ஆராய்வதில் கில்லாடியாக இருக்கிறார். சிறு வயதிலேயே ஏராளமான நல்ல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சிவாஜி, ரோபோ படங்கள் பார்த்த போது கூட ஏஆர் ரஹ்மான் என்னிடம் ரொம்ப பேசவில்லை. ஆனால் லால் சலாம் படத்தை பார்த்த பின், ஐஸ்வர்யாவின் செயலை பாராட்டினார்.

அவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் ஜெயிலர் விழாவில் நான் காக்கா கழுகு கதையை சொன்னதை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள். நான் ஏதோ விஜயை தான் அப்படி சொன்னேன் என்று நினைத்துவிட்டார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எங்கள் இருவருக்கும் நடுவில் போட்டி இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள்.

ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது. ரொம்ப சின்ன இடத்தில் இருந்து இன்று நடிகர் விஜய் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இப்போது அரசியலில் களமிறங்க போகிறார். அதற்கு முன்பே உதவிகளை செய்ய தொடங்கிவிட்டார். அவருக்கு எப்போதும் நல்ல வழிகாட்டியாக இருப்பேன். இதுபோல் எங்களுக்குள் எந்த விஷயத்தை பேச வேண்டும் என்பதற்காக வெளிப்படையாக பேசினேன் என்று கூறியுள்ளார்.

Most Popular