நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா, மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் கோலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக லியோ படம் மாறியது. இதனை தயாரிப்பாளர் லலித் குமார் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார். ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்தியதாகவும் தகவல் வெளியாகியது.
அதுமட்டுமல்லாமல் லியோ படத்திற்கு வெற்றி விழா வைக்கப்பட்டு, அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மீனாட்சி சவுத்ரி, லைலா, ஸ்னேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்காவிற்கு சென்று படக்குழு ஏராளமான சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்பின் தாய்லாந்தில் சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையிலேயே செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லியோ தயாரிப்பாளர் லலித் குமார் மகனுக்கு சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. இதன் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது தளபதி 68 படத்தின் புதிய லுக்கில் விஜய் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல் விஜய் வெள்ளை மற்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தது வித்தியாசமான ஸ்டைலாக இருந்தது.