Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentகோபம் வேண்டாம் நண்பா.. சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தரு தான்.. அதேமாதிரி தளபதியும்.. லியோ வெற்றிவிழாவில்...

கோபம் வேண்டாம் நண்பா.. சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தரு தான்.. அதேமாதிரி தளபதியும்.. லியோ வெற்றிவிழாவில் தெறிக்கவிட்ட தளபதி விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. நவ.19ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 2023ல் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமான ஜெயிலரின் சாதனையை லியோ முறியடித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், கொஞ்சம் நாட்களாக  சோசியல் மீடியாவில் நம்ம ரசிகர்களின் கோவம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அது வேண்டாம் நண்பா.. நமக்கு நிறைய வேலை இருக்கு.. இவ்ளோ கோவம் எல்லாம் வேண்டாம் நண்பா.. காந்தி சொன்னது தான் நியாபகம் வருகிறது.

வன்முறையை விடவும் வன்முறை இல்லாமல் இருப்பது தான் நல்லது. என்னை பொறுத்தவரைக்கும் நாம் எதை எளிதாக வெல்கிறோமோ, அது வெற்றியல்ல. நம்மால் எது முடியாதோ, அதனை இலக்காக வைத்து வெல்வது தான் வெற்றி. அதனால் அனைவரும் பெரிதாக கனவு காண வேண்டும். சிறிய கனவுகளே இப்போது குற்றம் என்கிறார்கள். அதே மாதிரி இந்த படத்துல நான் ரெடி தான் பாடல் வெளியாகி கொஞ்சம் பிரச்சனையை கொண்டு வந்துச்சு.

- Advertisement -

விரல் இடுக்குல தீப்பந்தம் அப்படின்ற வார்த்தையை ஏன் சிகரெட்னு எடுத்துகிறீங்க.. பேனா-னு நினைச்சுகோங்க.. பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அந்த வார்த்தையை கூல்-னு கூட இருக்கலாம்ல.. இந்த மாதிரி மழுப்பலான பதில்களை கூறிவிட்டு இறங்கி போக விரும்பவில்லை.. சினிமாவை சினிமாவாக பாருங்கள்.. எனக்கு நிச்சயம் தெரியும்.. நீங்கள் அதுபோல் செய்ய மாட்டீர்கள் என்று.. 

- Advertisement -

மிஷ்கினை எனக்கு யூத்-ல இருந்து தெரியும்.. யூத்- படத்தில் இருந்து சொன்னேன். அதேபோல் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் எப்போதும் அழகான ஆக்‌ஷனும் இருக்கும், அதிரடியான ஆக்‌ஷனும் இருக்கும். அதேமாதிரி லோகேஷ் கனகராஜ்.. மாநகரம் திரும்பி பார்க்க வச்சாரு.. கைதி திரும்பி திரும்பி பார்க்க வைத்தார். மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்கள் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.. அதேபோல் லியோவில்.. இனி ஹாலிவுட் மட்டும் தான் பேலன்ஸ் இருக்கு.

புரட்சி தலைவர்னா ஒருத்தன் தான்.. அதேபோல் உலகநாயகன்னா ஒருத்தர் மட்டும் தான்.. சூப்பர்ஸ்டார்-னாலும் ஒருத்தர் தான்.. அதே மாதிரி தல-னாலும் ஒருத்தர் தான்.. தளபதி-க்கு அர்த்தம் தெரியும்ல.. அதாவது மன்னர்களுக்கு கீழ் இருப்பாங்க.. மக்கள் நீங்க தான் மன்னன்.. நான் உங்களுக்கு கீழ் இருக்க தளபதி.. நீங்க ஆணையிடுங்கள்.. நான் செஞ்சு முடிக்கிறேன்.. நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.

Most Popular