Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentதுள்ளாத மனமும் துள்ளும்.. விஜய் சாருக்கு சிம்ரன் நடிப்பதில் விருப்பமில்லை.. இயக்குநர் எழில் கூறிய சீக்ரெட்

துள்ளாத மனமும் துள்ளும்.. விஜய் சாருக்கு சிம்ரன் நடிப்பதில் விருப்பமில்லை.. இயக்குநர் எழில் கூறிய சீக்ரெட்

விஜய், சிம்ரன், தாமு, வையாபுரி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இளைய தளபதி விஜய்-க்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே உள்ளிட்ட படங்களுக்கு பின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

- Advertisement -

பாடகராகும் கனவுடன் சென்னையில் இருக்கும் குட்டி, ருக்கு தனது கனவை எட்டிப்பிடிக்க எப்படி உதவுகிறார், கண் தெரியாமலேயே தனது கனவை எட்டிப்பிடிக்கும் ருக்கு, குட்டியை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறார் என்ற டிராமாவை முதல் படத்திலேயே மிகச்சிறப்பாக கையாண்டிருப்பார் இயக்குநர் எழில். காலம் முழுவதும் கொண்டாடப்படும் படமாக விஜய்-க்கு அமைந்தது.

இந்த நிலையில் இயக்குநர் எழில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், நடிகர் விஜய் அந்த நேரத்தில் ஏராளமான அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றி இருந்தார். அவரும், எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் புதிய இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைத்து நிறைய படங்களுக்கு வாய்ப்பளித்தனர்.

- Advertisement -

அப்போது துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை விஜய் மற்றும் எஸ்ஏசி இருவரிடமும் கூறினேன். இருவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்தது. அப்போது விஜய், ருக்கு கதாபாத்திரத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்க யோசித்துருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், சிம்ரன் என்று பதில் அளித்தேன். அதற்கு விஜய், உண்மையாகவே சிம்ரன் தான் நடிக்க வேண்டுமா, வேறு நடிகையை நடிக்க வைக்கலாமே என்று கேட்டார்.

- Advertisement -

ஆனால் நான் சிம்ரனை வேறு மாதிரி காட்டலாம் என்று கூறினேன். அதன்பின் சிம்ரனிடம் நேரடியாக பேசி என்னை கதை சொல்ல அனுப்பி வைத்தார். கதையை கேட்ட சிம்ரன், கிளாமர் ரோலில் நடித்த வந்த நான் இதுபோன்ற ஒரு கதையை தான் எதிர்பார்த்தேன் என்று கூறினார். படப்பிடிப்பில் விஜய் சார் எப்போதும் என்னை தான் கவனிப்பார். ஏதாவது கரக்‌ஷன் இருந்தால் கூட, நேரடியாக சொல் என்று என்னிடம் கூறினார்.

படத்தை முடித்த பின் விஜய் மற்றும் எஸ்ஏசி இருவரும் அமர்ந்து படத்தை பார்த்தனர். அப்போது விஜய் சாருக்கு படம் ரொம்ப பிடித்துவிட்டது. அவரை விடவும் எஸ்ஏசி சார் தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார். துள்ளிக் குதிக்கும் அளவிற்கு என்னை பாராட்டினார்கள். விஜய் சாரை வைத்து நான் இயக்கிய அந்த படம் தான் என்னை இப்போதும் அடையாளப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

Most Popular