Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஷாலுக்கு பொறுப்பு வந்துருச்சு .. லட்சுமி மேனனுடன் திருமணமா? வதந்திக்கு ஒரே ட்வீட்டில் முற்றுப்புள்ளி

விஷாலுக்கு பொறுப்பு வந்துருச்சு .. லட்சுமி மேனனுடன் திருமணமா? வதந்திக்கு ஒரே ட்வீட்டில் முற்றுப்புள்ளி

தமிழ் சினிமாவில் திருமணம் செய்யாமல் நடித்து வரும் ஒரே நடிகர் விஷால் தான். பாலிவுட்டில் சல்மான் கான் எப்படி 55 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறாரோ, அதேபோல் விஷால் 44 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். ஆனால் விஷால் – வரலட்சுமி இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென பிரிந்தனர்.

- Advertisement -

இதையடுத்து விஷாலுக்கு அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்த நடிகை அனிஷாவுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களிலேயே, அந்த காதலும் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து விஷால், திருமண விவகாரத்தில் என் கைகளை மீறி விஷயங்கள் போய்விட்டது என்று கூறினார்.

இதன்பின் கடன் பிரச்சனையில் சிக்கிய நடிகர் விஷால், எத்தனை படங்கள் நடித்தாலும் கடனை மட்டும் அடைக்கவே முடியவில்லை. இதனால் சொந்த நிறுவனத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற தயாரிப்பாளர்களின் நிறுவனங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். முன்காலத்தில் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வரும் விஷால், தற்போது முழு ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக மார்க் ஆண்டனி படம் ரிலீஸிற்கு தயாராக உள்ளது. அதேபோல் ஹரி இயக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் அடுத்தப் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென நடிகை லட்சுமி மேனனை விஷால் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஏற்கனவே பாண்டியா நாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

- Advertisement -

இதனால் இந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடமும் எழுந்தது. இந்த நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், வழக்கமாக எந்த வதந்திகளுக்கும் நான் விளக்கமும் கொடுத்ததில்லை. ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் என்று வதந்தி ஒன்று பரவி வருகிறது. இதனை முற்றிலும் மறுக்கிறேன். இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற தகவல்.

தற்போது விளக்கம் அளிப்பதற்கும் காரணம் உண்டு. இதில் சம்மந்தப்பட்டிருப்பவர் நடிகை என்பதை கடந்து அவர் ஒரு பெண். எனது திருமணம் எப்போதும் நடக்கும் என்று ஆராய்வதற்கு இதுஒன்றும் பெர்முடா ட்ரையாங்கிள் அல்ல. நேரம் வரும் போது நானே எனது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வமான செய்தியை கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Most Popular