Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentபிகில் பட நடிகையுடன் டேட்டிங் சென்றாரா ஜெய்… சுடச்சுட உருவான காதல் சில நாட்களில் ஆறிப்போன...

பிகில் பட நடிகையுடன் டேட்டிங் சென்றாரா ஜெய்… சுடச்சுட உருவான காதல் சில நாட்களில் ஆறிப்போன கதை என்ன…

தமிழ் சினிமாவில் அவ்வபோது ஏதாவது ஒரு வெற்றி படத்தில் ஒருவராய் நடித்து அதன் மூலம் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெய். நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்தின் மூலம் ஜெய் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார்.

- Advertisement -

இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான அவர், சென்னை 600028 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலராலும் பேசப்பட்டார். அதில் ரகு என்ற கதாபாத்திரத்தில் வந்த ஜெய்க்கு, படத்தின் கதையை நகர்த்தி செல்லும் முக்கியமான பொறுப்பை வெங்கட் பிரபு கொடுத்திருப்பார். அன்று முதல் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான குழுவில் ஒருவராக ஜெய் இடம் பெற்றார்.

நடிகர் ஜெய்யின் திரை உலக பயணத்திலேயே சிகரமாய் அமைந்த திரைப்படம் சுப்பிரமணியபுரம். சசிகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், ஆகச் சிறந்த கல்ட் மூவியாக அமைந்தது. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சில வெற்றி படங்கள் வெளியானாலும், பத்து ஆண்டு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அத்தி பூத்தாற் போல் ஒரு திரைப்படம் வெளியாகி அது காலம் தொட்டும் என்று பேசும்.

- Advertisement -

அப்படி ஒரு திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். இந்த படத்திற்குப் பிறகு ஜெய், முக்கிய நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், மட்டமான திரைப்படங்களை தேர்வு செய்ததால் அடுத்தடுத்து வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, நாடோடிகள், ராட்சசன் உள்ளிட்ட திரைப்பட வாய்ப்புகளையும் ஜெய் தவற விட்டார்.

- Advertisement -

எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சென்னை 600028 இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஜெயின் இருப்பை தக்க வைக்க உதவின. அதேசமயம் அவர் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் பலவும் படுதோல்வியை சந்தித்தன. இதில் சமீபத்தில் வெளியான வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே, எண்ணித்துணிக உள்ளிட்ட திரைப்படங்களை கூறலாம். தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில், அவருக்கு தம்பியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஜெய்யும், நடிகை அம்ருதா ஐயரும் காதலித்து வந்ததாகவும், தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஊர் சுற்றி வந்த நிலையில், தற்போது காதல் கசந்து இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular