Tuesday, April 23, 2024
- Advertisement -
HomeEntertainment"ஓ மை டார்லிங்" லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்? விஸ்வாசம் பட குழந்தை அனிதா சுரேந்திரனின்...

“ஓ மை டார்லிங்” லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்? விஸ்வாசம் பட குழந்தை அனிதா சுரேந்திரனின் சாமர்த்திய பதில்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் – நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது.

- Advertisement -

இந்தச் சூழலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகாவுக்கு இன்ஸ்டாகிராம் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் 18 வயதை கடந்த அனிகா சுரேந்திரன், இனி குழந்தை நட்சத்திரமாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் 18 வயதை எட்டிய போது, பார்ட்டி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார். அந்த புகைப்படங்களை அனிகா வெளியிட்ட போதே, பலரும் வாயடைத்து போயினர். ஏனென்றால் அப்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருந்தது.

தொடர்ந்து புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் அனிகா சுரேந்திரன். தற்போது அவர் மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் படத்துக்கு ‘ஓ மை டார்லிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒருசேர வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. மலையாளத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது முழு நீள காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். அதற்கு காரணம், ஹீரோயின் ஆனதும் ஏகப்பட்ட லிப் – லாக் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பதுதான். இதுகுறித்து விளக்கமளித்து அனிகா சுரேந்திரன், ஓ மை டார்லிங் முழு நீள காதல் திரைப்படம். இதில் முத்தக்காட்சி என்பது தவிர்க்க முடியாதது. இயக்குநர் கதை சொல்லும்போது காட்சியின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருந்தார். இதில் துளிக்கூட ஆபாசம் இருக்காது. அதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

- Advertisement -

Most Popular