Sunday, May 19, 2024
- Advertisement -
HomeEntertainmentதெலுங்கு பக்கம் ஒதுங்கும் அதுல்யா ரவி.. சிரஞ்சீவியவே சந்திச்சுட்டாரே.. விரைவில் ரிலீஸாகும் "மீட்டர்"!

தெலுங்கு பக்கம் ஒதுங்கும் அதுல்யா ரவி.. சிரஞ்சீவியவே சந்திச்சுட்டாரே.. விரைவில் ரிலீஸாகும் “மீட்டர்”!

நடிகை அதுல்யா ரவி தெலுங்கில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகும் நிலையில், அவருக்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து கூறியுள்ளார். தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதுல்யா ரவி. தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான ஏமாளி அதன்பிறகு அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ள திரைப்படங்கள் முக்கியமான படங்களாக அமைந்தன. சமீபத்தில் நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான கடாவர் என்ற படத்தில் ஏஞ்சல் ஜீசஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் முதன்முறையாக மீட்டர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சில இணையதளாகி வருகின்றன. கதாநாயகனுடன் ஆட்டம் போடும் அதுல்யா ரவியின் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்தநிலையில் நடிகை அதுல்யா ரவி, நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறார். மீட்டர் படத்தில் நடித்த அதுல்யா ரவிக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி. இந்த படங்களை டிரெண்ட் செய்துவரும் ரசிகர்கள் அதுல்யா ரவிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Most Popular