Thursday, April 25, 2024
- Advertisement -
HomeEntertainmentதெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உயரும் ஹனி ரோஸ்.. மீண்டும் பாலகிருஷ்ணா உடன் ஜோடி.. இந்த முறை...

தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உயரும் ஹனி ரோஸ்.. மீண்டும் பாலகிருஷ்ணா உடன் ஜோடி.. இந்த முறை ஆக்சன் ஹீரோ படத்தில் நான்கு ஹீரோயின்களாம்!

கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இடையிடையில் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, கந்தவர்வன், பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்
சமீபகாலமாகவே மலையாளத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக தெலுங்கு நடிகர் பாலையாவுடன் ஹனி ரோஸ் ஜோடி போட்டு நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. அவர் நடித்து வரும் படங்களில் வெற்றியால் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள ஹனி ரோஸ் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார். இவர் செல்லும் இடமெங்கும் இவரைக்காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கவர்ச்சிகரமான உடைகளில் பளிங்கு மேனியை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் ஹனி ரோஸ் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்தது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஹனி ரோஸ் மீண்டும் இணைந்துள்ளார். பாலகிருஷ்ணாவின் 108 வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகை ஸ்ரீலீலா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் பாலகிருஷ்ணாவின் சகோதரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்து காஜல் அகர்வால் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்.

- Advertisement -

மேலும் 2 ஹீரோயின்கள் இணைந்துள்ளனர். ‘வீர சிம்ஹா ரெட்டி’யில் அவருடன் நடித்த ஹனி ரோஸ் இதிலும் நடிக்கிறார். நடிகை பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. பாலகிருஷ்ணா உடன் ஜோடியாக நடித்ததும் ஹனிரோஸ் தெலுங்கு சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Most Popular